தமிழ்நாடு

வருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published

on

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இயல்புதான், இதனால் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரசை விட ஆபத்தானது பாரதிய ஜனதா கட்சி என்றும் அது படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றும் பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே குறைந்த தொகுதிகளை பெற்றுக் கொண்டு திமுக கூட்டணியில் இணைய நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version