தமிழ்நாடு

புதுவையில் திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு: எத்தனை தொகுதிகள்?

Published

on

தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கும், தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இது குறித்த ஒரு ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திமுகவுக்கு 14 தொகுதிகள் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் என மொத்தம் உள்ள 30 தொகுதிகள் பிரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், என்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும் புதுவையில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, புதுவையில் தனித்து போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version