தமிழ்நாடு

ஆண்களுக்கு பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை கொடுத்த நடத்துநர் சஸ்பெண்ட்!

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதும் அறிவித்த முதல் அறிவிப்புகளில் ஒன்று பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பெண்களுக்கு இலவச பயண டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இலவசமாக பெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கில் கொள்ளவே இந்த டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள நடத்துனர் ஒருவர் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இலவச விக்கெட்டை ஆண்கள் கொடுத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதிலும் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்ற விபரம் தெரியாத வடமாநில இளைஞர்களுக்கு அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து அந்த நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச டிக்கெட்டை ஆண்கள் வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றம் என்றும் அந்த டிக்கெட்டை கொடுக்கும் நடத்துனர் மற்றும் அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் ஆகிய இருவருமே தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் தற்போது போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே நடத்துனர் பெண்களுக்கான டிக்கெட்டை கொடுத்தாலும் அதை பயணிகள் எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version