இந்தியா

அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை: கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு!

Published

on

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை நடத்தி வந்த அனில் அம்பானி அந்த நிறுவனம் நஷ்டமானதால் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கி வந்தார். இதனையடுத்து அவரது சகோதரர் முகேஷ் அம்பானி அவருக்கும் உதவும் வகையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை 25,000 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்தார்.

ஆனால் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அந்த நிறுவனத்துக்கு 1500 கோடி ரூபாய் தர வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு சென்ற இந்த விவகாரத்தில் முதல் தவணையாக 550 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் டிசம்பர் மாதத்திற்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்குகு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் தொடங்கியுள்ளநிலையில் அவர் அந்த குறிப்பிட்ட முதல் தவனை தொகையை தராததால் எரிக்ஸன் நிறுவனம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் அனில் அம்பானியை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும், நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version