தமிழ்நாடு

6-10 ஆம் வகுப்பில் கணினி பாடம் – தமிழக அரசின் புதிய திட்டம்

Published

on

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் கணினி பாடத்தை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளால, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு கணனி அறிவியல் பாடத்தை 6 ஆம் வகுப்பு முதலே சேர்க்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கான பாடத் திட்டம் தயாரிப்பு, பாட வேலைகள் உள்ளிட்ட பணிகள் முதற்கட்டமாக நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. மேலும் கணினி அறிவியல் பாடம் குறித்து தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அந்த பாடத்தின் மதிப்பெண்கள் தேர்சிக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்து உள்ளது.

 

Trending

Exit mobile version