தமிழ்நாடு

மீண்டும் 6ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்: தமிழக அரசு தகவல்!

Published

on

மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான பாட புத்தகங்கள் பாடநூல் நிறுவனம் அச்சிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான ஆசிரியர்கள் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் திடீரென 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை தோன்றியவுடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கைவிடப்பட்டது. அதற்கான போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இந்த ஆண்டு முதலே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக 40 ஆயிரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஆறாம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆறாம் வகுப்பிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version