தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு: தமிழக அரசு அரசாணை

Published

on

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கட்டாயம் தமிழ் தாள் தேர்வை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு சிலருக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது. மேலும் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இது அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசு ஆணையில் கட்டாய தமிழ் தேர்வு என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சஙக்த்தின் மனுவில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க சிரமப்படுவார்கள் என்றும் இம்மாணவ மாணவியர்கள் சிலர் முன்பருவபள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள் என தெரிவித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வில் இருந்து இவர்களுக்கு விலக்குகோரி அவர்களுக்கு தனியாக பொது ஆங்கில தாளினை நடத்த கோரியுள்ளனர்.

இதனை ஏற்று, உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக்குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சு & மொழித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடுகள், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள், பன்முகக் குறைபாடுகள் என்று 8 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், 40 சதவிகிதத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version