தமிழ்நாடு

திரையரங்குகளில் இனி பாப்கார்ன் ரூ.100க்கு விற்க முடியாது: தமிழக அரசு அதிரடி!

Published

on

தமிழகத்தில் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் 150 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில் திரையரங்கின் உள்ளே உள்ள உணவு பொருட்களின் விலைகள் விண்ணை முட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாப்கான் விலை 100 ரூபாய் என்றும் காபி விலை 100 ரூபாய் என்றும் கொள்ளை லாபம் அடிப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் தமிழகத்தில் திரையரங்குகளில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர்வு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அடுத்து கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்க படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்த புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version