சினிமா செய்திகள்

10 பிரிவுகளில் போட்டியிடும் ரோமா; ஆஸ்கர் இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியீடு!

Published

on

91வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

நேற்று மாலை ஆஸ்கர் விருது விழா போட்டியில் இறுதியாக மோதும் அதிகாரப்பூர்வமான பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக பத்து பிரிவுகளில் அல்போன்ஸா குரான் இயக்கிய வேற்று மொழி திரைப்படமான ரோமா போட்டியிட தேர்வாகியுள்ளது.

இதனை தொடர்ந்து எ ஸ்டார் இஸ் பார்ன் மற்றும் கிறிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன.

மார்வெல் வெளியிட்ட பிளாக் பாந்தர் திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முழு பட்டியல் விவரம் இதோ..

சிறந்த படம்:

பிளாக்பாந்தர்

பிளாக்லான்ஸ்மேன்

போஹிமன் ராப்சோடி

தி ஃபேவரைட்

க்ரீன் புக்

ரோமா

எ ஸ்டார் இஸ் பார்ன்

வைஸ்

சிறந்த இயக்குநர்:

அல்போன்சா குரான் (ரோமா)

யோர்காஸ் லந்திமோஸ் (தி பேவரைட்)

ஸ்பைக் லீ (பிளாக்லான்ஸ்மேன்)

ஆடம் மெக்கே (வைஸ்)

பவல் பவ்ளிகோவ்ஸ்கி (கோல்ட் வார்)

சிறந்த நடிகை:

யாலிட்டா அபாரிசோ (ரோமா)

கிளென் க்லோஸ் ( தி வைஃப்)

ஒலிவியா கோல்மேன் (தி பேவரைட்)

லேடி காகா ( எ ஸ்டார் இஸ் பார்ன்)

மெலிசா மெக்கர்தி (கேன் யு எவர் ஃபர்கிவ் மி)

சிறந்த நடிகர்

கிறிஸ்டியன் பேல் (வைஸ்)

பிராட்லி கூப்பர் (எ ஸ்டார் இஸ் பார்ன்)

வில்லியம் டாஃபோ (அட் எடர்னிட்டி கேட்)

ரமி மாலிக் (போஹிமன் ராப்சோடி)

விகோ மார்டென்சன் (க்ரீன் புக்)

சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள்:

கேபர்னம் (லெபனான்)

கோல்ட் வார் (போலந்து)

நெவர் லுக் அவே (ஜெர்மனி)

ரோமா (மெக்ஸிகோ)

ஷாப்லிஃப்டர்ஸ் (ஜப்பான்)

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்:

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்

கிறிஸ்டோபர் ராபின்

ஃபர்ஸ்ட் மேன்

ரெடி பிளேயர் ஒன்

சோலோ

மேலும், சிறந்த ஒளிப்பதிவு, ஒப்பனை, சவுண்ட், அனிமேஷன் போன்ற பல பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version