பர்சனல் ஃபினான்ஸ்

வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எனவே ஃபிக்சட் டெபாசிட்களில் செய்யப்படும் முதலீடுகள் சரியும்.

இதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த நிதி அமைச்சகம், சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை, டிசம்பர் மாதம் வரை அப்படியே தொடர முடிவு செய்துள்ளது.

அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான டெர்ம் டெபாசிட் திட்டம், வங்கி பிக்சட் டெபாசிட் போன்ற ஒரு திட்டமே ஆகும். இந்த அஞ்சல் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால், வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட கூடுதல் லாபம் பெற முடியும்.

ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு, எஸ்பிஐ வங்கி 4.9%, ஐசிஐசிஐ வங்கி 5%, எச்டிஎப்சி வங்கி 5.1% லாபத்தை அளிக்கின்றன. அதுவே அஞ்சல் அலுவலகத்தில் உள்ள டெர்ம் டெபாசிட் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்தால் 5.5 சதவீத லாபம் வழங்கப்படுகிறது.

வரி சேமிப்பு அளிக்கும் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது, ஸ்பிஐ வங்கி 5.4%, ஐசிஐசிஐ வங்கி 5.5%, எச்டிஎப்சி வங்கி 5.5% லாபத்தை அளிக்கின்றன. அதுவே அஞ்சல் அலுவலகத்தில் உள்ள டெர்ம் டெபாசிட் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்தால் 6.7 சதவீத லாபம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தில் 5 வருடத்திற்கு முதலீடு செய்தால் 6.8 சதவீதம் லாபமும் கிடைக்கும்.

வங்கிகளுக்கும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் உள்ள இந்த மிகப் பெரிய வட்டி விகித வித்தியாசமானது, அதிகம் முதலீடுகளை ஈர்க்கும். ஆனால் வங்கி பிக்சட் டெபாசிட்களில் இடையில் வெளியேறுவது சுலபம், அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் இடையில் வெளியேறுவது கொஞ்சம் கடினம்.

seithichurul

Trending

Exit mobile version