இந்தியா

ரூ.16 லட்சம் கம்பெனி பணத்தை கையாடல் செய்து பலான படம் பார்த்த ஊழியர் கைது!

Published

on

வேலை பார்க்கும் கம்பெனி பணத்தை ரூபாய் 16 லட்சம் கையாடல் செய்து பலான படம் பார்த்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற நகரில் உள்ள இர்பான் ஷேக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019 முதல் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கம்பெனியின் பணத்தை ரூபாய் 16 லட்சம் கையாடல் செய்து அந்த பணத்தை பலான படம் ஆன்லைனில் பலான படம் பார்க்க செலவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது தான் ஆன்லைனில் பலான படங்களை பார்ப்பதற்கு அடிமையானதாகவும் அதற்காக பணம் நிறைய தேவைப்பட்டதாகவும் இதனால் கம்பெனி படத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 16 லட்சம் வரை எடுத்து பலான படங்களை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும் அந்தப் பெண்ணுக்கும் அடிக்கடி பணம் அனுப்பியதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இர்பான் ஷேக்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பெனி பணத்தை ரூபாய் 16 லட்சம் கையாடல் செய்து பலான படம் பார்த்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version