தமிழ்நாடு

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!

Published

on

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய இடது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்றும் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டாலும் இன்று இரு தரப்பிற்கும் இடையே ஒத்த கருத்து ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட திருத்துறைபூண்டி, பவானிசாகர், சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் 6 தொகுதிகள் கொடுக்க திமுகவும் சம்மதம் தெரிவித்து விட்டது.

இதேபோல் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததோடு ஒப்பந்தத்திலும் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிகளுக்கு மட்டும் தொகுதி ஒதுக்கீடு பணி முடிந்துவிட்டால் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு திமுக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version