ஆரோக்கியம்

உணவாகவும், மருந்தாவும் பயன்படும் அத்திப்பழம்!

Published

on

உணவாகவும், மருந்தாவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version