செய்திகள்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை – அரசு எச்சரிக்கை

Published

on

இந்தியா முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என்றும் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வழிபடுமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பதும் ஒரு சிலர் தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்போம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்தால் சட்டப்படை நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version