இந்தியா

சிலிண்டர் விலை ரூ.91.50 குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் 1907 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டெல்லியில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.899. 50 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் ரூபாய் ரூ.915 50 என்றும் கொல்கத்தாவில் ரூ.926 என்றும் மும்பையில் ரூபாய் 899. 50என்றும் விற்பனையாகி வருகிறது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version