தமிழ்நாடு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதமும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் என இரண்டு வகையான சிலிண்டர்கள் இருக்கும் நிலையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு குறித்த அறிவிப்புகளை எல்பிஜி சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.2234.50 என அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அதிகரிக்கப்பட்ட விலையானது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சமையல் சிலிண்டரின் விலை உயரவில்லை என்பது ஆறுதல் கூறிய விஷயம் ஆகும்.

ஆனால் அதே நேரத்தில் தேநீர் கடைகள், ஓட்டல்கள் ஆகியவை நடத்தும் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தேனீர் உள்பட உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது என்பதும் அது பொது மக்களின் தலையில் தான் விழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் வணிகப்பயன்பாடுக்கான சிலிண்டர் விலை ரூ.2101 என்றும், மும்பையில் வணிகப்பயன்பாடுக்கான சிலிண்டர் விலை ரூ2051 என்றும் கொல்கத்தாவில் வணிகப்பயன்பாடுக்கான சிலிண்டர் விலை ரூ2,174 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ. 899.50, எனவும், கொல்கத்தாவில் ரூ.926 எனவும், மும்பையில் ரூ.899.50 எனவும், சென்னையில் ரூ.915.50 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version