சினிமா செய்திகள்

தளபதி விஜய்-க்கு வில்லன் ஆக நடிக்கணும்… ஆர்யாவின் நீண்டநாள் ஆசை!

Published

on

தளபதி விஜய்-க்கு வில்லன் ஆக நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய மிகப்பெரிய ஆசை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பாராட்டுகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் ஆர்யா பேட்டி அளித்துள்ளார். படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஆர்யா தனது விருப்பங்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.

ஆர்யா கூறுகையில், “வில்லன் ஆக நடிக்க நான் தயங்கவே மாட்டேன். யார் என்றாலும் வில்லனாக நடிக்கத் தயார். ஏற்கெனவே அஜித் சாருக்கு வில்லன் ஆக நடித்திருக்கிறேன். தற்போது விஷாலுக்கு எனிமி படத்தில் வில்லன் ஆக நடித்து உள்ளேன். எனக்கு பெரிய ஆசை தளபதி விஜய் சார் உடன் வில்லன் ஆக நடிக்க வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஆர்யாவுக்கு அடுத்தடுத்து அரண்மனை 3, எனிமி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version