சினிமா செய்திகள்

மீண்டும் அமர்களப்படுத்த வரும் அதாரு அதாரு கூட்டணி!

Published

on

அஜித்தின் 60வது படத்தில் அருண்விஜய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் 60வது படத்தையும் இயக்குனர் எச்.வினோத்தே இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதேவி போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூரும் நடிக்கிறார். நடிகர் அருண்விஜய் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் அஜித்தும் அருண்விஜயும் இணையும் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது.

Trending

Exit mobile version