சினிமா செய்திகள்

காமெடிக்கு காமெடி.. திகிலுக்கு திகில்.. காஞ்சனா 3 விமர்சனம்!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் இன்று ரிலீசானது. காஞ்சனா 2 படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஆனது. காஞ்சனா 3, காஞ்சனா 2வை விட நல்லா இருக்கா? இல்லையான்னு பார்க்கலாமா?

லாரன்ஸ் நடிப்பை விட இயக்கத்தில் அதிக ஸ்கோர் செய்கிறார். அரைச்ச மாவை அரைச்சாலும், அதுக்கும் வேணும் தனித்திறமை என்ற சீமராஜா பாடல் அந்த படத்துக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், காஞ்சனா சீரிஸ் படத்துக்கு கை கொடுக்கிறது. நிச்சயம் அந்த தனித்திறமை லாரன்ஸ் மாஸ்டரிடம் அதிகமாகவே இருக்கிறது.

கவர்ச்சிக்கு ஓவியா, வேதிகா, டம்போலி என மூன்று நாயகிகள். பேய் பிடித்து மிரட்டும் காட்சிகளிலும் செமையா ஸ்கோர் செய்துள்ளனர்.

கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் காம்போ இந்த படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் தேவதர்ஷினி, ஸ்ரீமன் இல்லாத குறையை இந்த பார்ட்டில் பூர்த்தி செய்துள்ளனர்.

சரி என்னதான் சார் படத்தின் கதை?

தனது தாத்தாவின் சத்யாப்த பூர்த்தி அதாவது 60ம் கல்யாணத்துக்கு குடும்பத்துடன் ராகவா லாரன்ஸ் செல்கிறார். செல்லும் வழியில், அவரும் அவர் குடும்பமும் ஒரு இடத்தில் உணவு அருந்துகின்றனர். அப்போது, அந்த பகுதியில் அடிக்கப்பட்ட ஒரு ஆணியை விளையாட்டாக ராகவா லாரன்ஸ் பிடுங்க, அவருடனே அந்த பேய் தொற்றிக் கொள்கிறது.

அந்த பயங்கரமான பேய் எப்படி செத்தது. தன்னை கொன்றவர்களை லாரன்ஸ் உடம்பின் உதவியைக் கொண்டு எப்படி பழி தீர்த்தது என்பதை தனது பாணியிலேயே காமெடியுடனும் திகிலுடனும் லாரன்ஸ் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் சத்யராஜ், சூரி, நெடுமுடி வேணு, கிஷோர் உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பகலில் காமெடியும் இரவில் பேய் சேட்டையும் என தியேட்டர்களில் சிரிப்பு ஒலியும், பயத்துடன் கூடிய அலறல் சத்தமும் மாறி மாறி கேட்கின்றது.

நிச்சயம் காஞ்சனா 3 மாபெரும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. காஞ்சனா 2 செய்த 100 கோடி வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது இந்த வார கலெக்‌ஷன் ரிப்போர்ட் மூலம் தெரியவரும்.

கோடை விடுமுறை குறிவைத்துள்ள ராகவா லாரன்ஸுக்கு காஞ்சனா 3 நிச்சயம் வசூல் மழையை ஈட்டித் தரும்.

படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக உள்ளன. அந்த ஓவர் ஃப்ளோவை குறைத்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

மொத்தத்தில் காஞ்சனா 3 தியேட்டருக்குச் சென்று தைரியமாக பார்க்கலாம்.

சினிமா ரேட்டிங்: 3.5/5.

seithichurul

Trending

Exit mobile version