சினிமா செய்திகள்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நெல்லை சிவா, இன்று காலமானார்.

நெல்லை சிவா, நெஞ்சு வலி காரணமாக கலாமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு வயது 69.

நெல்லை வட்டார தமிழ் மொழி வழக்கைப் பேசி பல திரைப்படங்களில் கவனம் ஈர்த்தவர் நெல்லை சிவா. குறிப்பாக ‘வைகைப் புயல்’ வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் நடித்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

வடிவேலுவுடன் ‘கிணத்த காணோம்’ என்கிற நகைச்சுவை சீனுக்கா அவர் அதிகம் பிரபலமடைந்தார். அவரின் திடீர் இறப்பு தமிழ்த் திரையுலகை சோகம் அடைய வைத்துள்ளது.

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் பதிவுகளை சமூக வலைதளங்களில் இட்டு வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version