சினிமா செய்திகள்

காமராஜருடன் 7 வயதில் புகைப்படம் எடுத்து கொண்ட தமிழ் நடிகர்: புகைப்படம் வைரல்!

Published

on

முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஏழு வயதில் புகைப்படம் எடுத்துக் கொண்டதை தமிழ் நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த் என்பது தெரிந்ததே. பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ’கை கொடுக்கும் கை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான சின்னி ஜெயந்த், அதன் பிறகு பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

குறிப்பாக கார்த்திக், ரேவதி நடித்த ’கிழக்கு வாசல்’ முரளி நடித்த ’இதயம்’ பிரசாந்த் நடித்த ’கண்ணெதிரே தோன்றினாள்’ போன்ற படங்கள் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரே தயாரித்த ’சின்ன புள்ள’ என்ற திரைப்படத்திலும் அவரது நடிப்பு பாசிட்டிவாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சின்னிஜெயந்த் சமீபத்தில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜருடன் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அப்போது தான் ஏழு வயதாக இருந்ததாகவும் காமராஜர் ஐயா முன் பாட்டு பாடியதாகவும், நீ நல்ல கலைஞனாக வருவாய் என்று அவர் தன்னை ஆசிர்வதித்ததாகவும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த ட்வீட்டும் அவர் பதிவு செய்த புகைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

’கற்றவை’ ’ஓவர்நைட்’ ’திரும்பி வா’ ஆகிய 3 படங்களில் நடித்து முடித்துள்ள சின்னிஜெயந்த் மேலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒன்று விஜய் சேதுபதி நடித்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version