வைரல் செய்திகள்

ஆஸ்திரேலியா மார்க்கமாக ‘கைலாசா’ வாங்க..!- ரூட் சொல்லும் நித்தியானந்தா..!

Published

on

நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு எந்த வழியாக எப்படி வரலாம், விசா நடைமுறைகள் என்ன என்பது குறித்த விவரங்களை எல்லாம் அறிவித்துள்ளார் நித்தியானந்தா.

நித்தியானந்தா தனியாக ஈக்வேடார் நாட்டில் ஒரு தீவையே வாங்கி அங்கு கைலாசா என ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கைலாசா நாட்டுக்கு மக்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு ஆஸ்திரேலியா மார்க்கமாக வரலாமாம். ஆஸ்திரேலியா வரை வந்து அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு விசா பெற்றுக்கொண்டு அதன் மூலம் செல்ல முடியுமாம். ஆஸ்திரேலியாவில் கைலாசா நாட்டின் ‘கருடா’ என்னும் விமானம் தயாராக எப்போதும் இருக்கும் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

3 நாட்கள் வரையில் இலவச உணவு, இருப்பிடம் தற்காலிக விசா ஆகியன வழங்கப்படும். 3 நாட்களுக்கு மேல் தங்க வேண்டுமானால் அதற்கு திருப்பியும் தனி விசா ஒன்றையும் எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் வங்கி, நாணயம், பண மதிப்பு, விசா என உள்ளது.

Trending

Exit mobile version