உலகம்

திடீரென மூடப்பட்டது கொழும்பு பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிலை என்ன?

Published

on

கடந்த சில வாரங்களாக கடுமையான சரிவில் இருந்த கொழும்பு பங்குச்சந்தை திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இலங்கையில் தங்கம் விலை ஒரு சவரன் 2 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் தமிழகத்தை விட பலமடங்கு கொடுத்து வாங்க வேண்டிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொழும்பு பங்குச்சந்தை கடுமையான சரிவில் இருந்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள் அவசர அவசரமாக தாங்கள் முதலீடு செய்த பணத்தை வெளியே எடுத்தனர். இதனால் மேலும் கொழும்பு பங்குச்சந்தை மேலும் சரிந்து அதளபாதாளத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தை 5 நாட்கள் மூடப்படுவதாக பங்குச்சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புரிதலைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடபடுவதாக கூறப்பட்டாலும் மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எப்பொழுது மீண்டும் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்படும் என்ற நிலையை தெரியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version