தமிழ்நாடு

கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரிக்கல்வி இயக்ககம்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது என்பதும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

இதன்படி கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பேராசிரியர்கள் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்றும் வழிகாட்டி நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் விருப்பப்பட்டால் மட்டுமே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கொரோனா தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்து அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version