தமிழ்நாடு

தமிழகத்தில் 8 ஆம் தேதி முதல் முதல் கல்லூரிகள் இயங்க அனுமதி – 6 நாட்கள் வகுப்பு!!

Published

on

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழு வீச்சில் இயங்க அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில்,

‘மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் (கலை, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள்) இருக்கும் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகள் (டிப்ளோமா வகுப்புகள் உட்பட) வரும் 8 ஆம் தேதி முதல் முழு வீச்சில் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளும் முழு வீச்சில் செயல்பட அனுமதி கொடுக்கப்படுகின்றன.

தற்போது இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க ஏதுவாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வாரம் 6 நாள் வரை இயங்கலாம். நடப்பு 2020- 2021 கல்வி ஆண்டு முடியும் வரை இந்த நடைமுறை தொடரலாம். கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version