தமிழ்நாடு

கஷ்டப்பட்டு படிங்க தம்பி: குறும்புக்கார மாணவனுக்கு குஷ்பு கூறிய அட்வைஸ்!

Published

on

தமிழக பாஜக வேட்பாளர் குஷ்பு சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரம் செய்தபோது குறும்புக்கார மாணவர் ஒருவர் செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று குஷ்புவை நோக்கி கூறியபோது ’ஏன் தம்பி ஏன்? கஷ்டப்பட்டு படிங்க என்று அட்வைஸ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு நேற்று சூளைமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு கல்லூரி மாணவர் குஷ்புவிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். பள்ளி மாணவர்கள் மட்டும் தேர்வு இல்லாமல் ஜாலியாக இருக்கின்றார்கள் என்றும், ஆனால் நாங்கள் மட்டும் ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும், எனவே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

அதற்கு குஷ்பு ’ஏன் தம்பி ஏன்? கஷ்டப்பட்டு படிங்க, ஏற்கனவே கொரோனா காலத்தில் நிறைய விடுமுறை ஆகிவிட்டது என்று கூறிவிட்டு ’நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் அதை மட்டும் சொல்ல முடியாது என்று நழுவிச் சென்று விட்டார்.

ஓட்டுக்காக செமஸ்டர் தேர்வு மற்றும் பள்ளி தேர்வுநிலை ரத்து செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் மாணவனுக்கு கஷ்டப்பட்டு படியுங்கள் என்று குஷ்பு அட்வைஸ் சொன்னது அந்த பகுதி மக்கள் அனைவரையும் கவர்ந்தது.

Trending

Exit mobile version