தமிழ்நாடு

கல்லூரி சேர்க்கைக்கான தேதி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியானவுடன் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் மதிப்பெண் பட்டியலும் வெளியானது. அதேபோல் விரைவில் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த தேதியை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை கல்லூரியில் சேருவதற்காக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதேபோல் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜூலை 22-ஆம் தேதி மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்த பின்னர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க தயார் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version