தமிழ்நாடு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் “மாநாடு” படம் பார்த்த மாவட்ட ஆட்சியர்!

Published

on

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படத்தை பார்த்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இந்த படம் திரை உலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் “மாநாடு” திரைப்படத்தை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களும் பார்த்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப் படுத்தும் நோக்கத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி செய்த இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வருண்குமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்த, மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு அமர்ந்து திரைப்படம் கண்டு களித்தனர்.

Trending

Exit mobile version