தமிழ்நாடு

தமிழகதில் குளிர் இன்னும் அதிகமாகும்!

Published

on

தமிழகத்தில் அதிகமான பகுதிகளில் மிக அதிகமான அளவில் குளிர் பதிவாகியுள்ளது. இந்த குளிர் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் இன்னும் அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகப் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நீலகிரி மற்றும் மலைப் பிரதேச மாவட்டங்களில் அதிகளவில் குளிர் உள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி உருவாகியுள்ளது. வால்பாறையில் 5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவே வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த குளிர் வரும் நாட்களில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் வறண்ட வானிலை இருக்குமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கடும் குளிர் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக ஜனவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் தமிழகத்தில் குளிர் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதிக அளவு குளிர் வீசும் வடமாநிலங்களிலிருந்து வீசும் காற்றாலும் தமிழகத்தை குளிர் வாட்டுவதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version