தமிழ்நாடு

கோவை வன்முறை சிறு சம்பவம்: வானதி சீனிவாசன் விளக்கம்!

Published

on

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கோவை வருகையின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் சிறு சம்பவம் என்றும் ஊதி பெருசாக்குகிறார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்திருந்தார். அவரது வருகையை ஏற்று கோவையில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என பாஜக தொண்டர்கள் ரகளை செய்தனர்.

இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு நிலையில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கடைகள் மீது கல்வீச்சு நடந்ததாகவும் கூறப்பட்டது. இதில் ஒரு செருப்பு கடை பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கோவை வன்முறை குறித்து விளக்கமளித்த பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ’கோவையில் பாஜக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் சிறு சம்பவம் என்றும் அதனை ஊதி எதிர்க்கட்சிகள் பெருசா பெரிதாக்குகிறது என்றும் கூறியுள்ளார். வானதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version