தமிழ்நாடு

மேலாடையை கழற்ற சொன்ன ஆசிரியர்: தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடிதம்!

Published

on

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம் என எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை ஆர்எஸ் புரம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை மட்டும் பள்ளிக்கு வரச் சொல்லிய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தபோது பேருந்தில் செல்லும்போது இடிப்பார்களே அது போல நினைத்துக் கொள் என தலைமையரிசியர் ஆறுதல் கூறியதாகவும் பெற்றோரிடம் சொல்லி பிரச்சினையை உண்டாக்க வேண்டாம் என்றும் மாணவிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன் வேறு பள்ளிக்கு மாறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version