தமிழ்நாடு

கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: அதிர்ச்சியில் வியாபாரிகள்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியமான கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தற்போது கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களான பால் மருந்து கடைகள் மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கோவையில் உள் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு காரணமாக வாடிக்கையாளர் கூட்டம் அதிகம் இருந்ததால் பெரும்பாலான கடைகள் 5 மணிக்கு மேலும் இயங்கி வந்தன.

அதுமட்டுமின்றி தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமலும் பலர் பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் மாலை 5 மணிக்கு அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடுமாறு எச்சரித்தனர். கடை மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில் பால் மருந்து பொருட்கள் காய்கறி ஆகியவற்றை ஆகியவை போலவே மளிகை கடைகளுக்கும் விதிவிலக்கு வழங்கி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அதேபோல் ஓட்டல்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பேக்கரிகளுக்கு வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending

Exit mobile version