தமிழ்நாடு

கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து: ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

Published

on

கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து குறித்த தகவல் கோவை மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில் இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மேயர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவை மேயராக கல்பனா ஆனந்த்குமார் வெற்றி பெற்று சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் கோவை மாநகரில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் எந்தெந்த பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்பதை ஆய்வு செய்து உடனடியாக கழிப்பறை இல்லாத பள்ளியில் கழிப்பறை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

இதனையடுத்து கோவையில் இனி கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகளை இல்லை என்ற நிலை ஏற்படும் என்பதால் கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக திமுக அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செய்யாததை கோவை மேயர் ஒரே நாளில் செய்து முடித்துவிட்டார் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்

seithichurul

Trending

Exit mobile version