தமிழ்நாடு

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மீண்டும் இரவு விமான சேவைகள் தொடக்கம்!

Published

on

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகளால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் விமான போக்குவரத்துக்குச் சென்ற ஜூன் 2022 முதல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இப்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் மார்ச் 27-ம் தேதி முதல் இரவு நேர விமானச் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27-ம் தேதி காலை 4:30 மணிக்கு சார்ஜாவிலிருந்து கோயம்புத்தூர் வரும் விமானம் இங்கு தரையிரக்கம் செய்யப்படும்.

மேலும் காலை 5:10 மணியளவில் சார்வுக்குக் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமான செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிற விமானச் சேவைகள் 24 மணிநேரமும் இந்த விமான நிலையத்தில் கிடைக்கும்.

seithichurul

Trending

Exit mobile version