தமிழ்நாடு

தொழிலதிபரை மிரட்டி ரூ.21 லட்சம் பறிப்பு! இந்து மகாசபை நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது!!

Published

on

ஈரோட்டில் தொழிலதிபரை கடத்தி 21 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் இந்து மகாசபை நிர்வாகி உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை கீழ்பாக்கத்தில் பழைமையான பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்கும் தொழில் நடத்தி வருபவர் மோகன். இவரை ஆந்திராவைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு, தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

இதற்காக ஈரோடு சென்று விட்டு இரிடியம் பெற்று திரும்பினார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்து, நீங்கள் இரிடியம் கடத்துவதாக போலீசாரிடம் மாட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும், மோகனின் மனைவிக்கு போன் செய்து 5 கோடி ரூபாய் தரும்படி மிரட்டியுள்ளனர். அதோடு தருமபுரி மகேஷ் என்பவரது கணக்கில் 35 லட்சம் ரூபாய் பணம் போடும்படியும் கூறியுள்ளனர். இதற்கு பயந்த மோகனின் மனைவி 21 லட்சம் ரூபாயை போட்டுள்ளார். ஆனாலும், மோகனை அந்தக் கடத்தல் கும்பல் விடுவிக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த மோகனின் மனைவி போலீசாரிடம் புகாரளிக்க, தனிப்படையினர் ஈரோடு சென்று கடத்தல் கும்பலை மடக்கினர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதில் லைஜூ (எ) ஜீவா என்பவர்  இந்து மகாசபையின் கோவை மாவட்ட அமைப்பாளர் ஆவார்.

Trending

Exit mobile version