தமிழ்நாடு

முகக்கவசம் அணியாததால் ரூ.5000 அபராதம்: கோவையில் பரபரப்பு!

Published

on

முக கவசம் அணியாததால் கோவையில் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் இன்றி வெளியே வரும் நபர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்றில் திடீரென சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை செய்ததில் அங்கு பணிபுரிந்த 25 ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்தது . இதனை அடுத்து 25 ஊழியர்களுக்கும் தலா ரூபாய் 200 வீதம் ரூ.5000 அபராதம் விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே கடையில் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது கோவை மக்கள் அனைவரும் முகத்தை அணியாமல் வெளியே வருவதில்லை என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version