தமிழ்நாடு

கோவையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Published

on

கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஒரு சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கோவையில் மட்டும் 224 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து பார்ப்போம்.

* பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை.

* பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.

* அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* அனைத்து உணவகங்கள், அடுமனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

* சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி.

* உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி.

* பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை.

* மேலும் வரும் 20 ம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் பணி புரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் வருகின்ற செப்டம்பர் 17 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version