தமிழ்நாடு

பணியாளர்களுக்கு கொரோனா: கோவையில் பிரபல வங்கி மூடப்பட்டது!

Published

on

கோவையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று சுமார் 1500 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்பதும் அதில் சுமார் 500 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் கிளை ஒன்று திடீரென மூடப்பட்டது.

அந்த வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவையில் வங்கி ஒன்று மூடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version