ஆரோக்கியம்

காபி நல்லதா? கெட்டதா? – ‘கிரைம் நாவல் மன்னன்’ ராஜேஷ்குமாரின் அறிவியல் பூர்வ விளக்கம்

Published

on

‘கிரைம் த்ரில்லர் நாவல்களின் மன்னன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஜேஷ்குமார். இவரது நாவல்கள் ஒவ்வொன்றும் வாசகர்களை ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ உட்காரவைக்க தவறுவதில்லை. தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் படம் எடுக்கப்படுகிறது எனில், அதில் பெரும்பாலும் ராஜேஷ் குமார் நாவல்களின் வாசம் இன்றி இருக்காது. நிறைய முறை காவல் அதிகாரிகளே, சில சிக்கலான வழக்குகளில் இவரின் உதவியை நாடியுள்ளனர்.

அதேசமயம் தனது கதைகளில் டெக்னிக்கலாக… அதாவது விஞ்ஞானப்பூர்வமாக பல அம்சங்களை சேர்த்திருப்பார். இதற்காக அவர் எத்தனையோ ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மருத்துவம், சமூகம், தொழில்நுட்பம் என்று எந்தத் துறையாக இருந்தாலும், அதன் அப்டேட்ஸ் ராஜேஷ் குமார் கைகளில் இருக்கும்.

இதனால், தனது வாசகர்களின் பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளிப்பது ராஜேஷ் குமாரின் வழக்கம். அதன்படி, வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்வியும், அதற்கு கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அளித்த அறிவியல் ரீதியிலான பதில் இங்கே,

காபி குடிப்பது நல்லதா கெட்டதா பலரும் பலவிதமாக சொல்கிறார்கள் உங்கள் பதில் என்ன சார்….?

காபி சாப்பிடுவதை முறையாக ஒழுங்குப் படுத்திக் கொண்டால், அது ஒரு மருந்து.
வெறும் வயிற்றில் காப்பி சாப்பிடுவதைக் காட்டிலும், காலை உணவுக்கு பின் சாப்பிட்டால், காபியில் உள்ள நச்சுத்தன்மை பாதியாகக் குறைந்து, ஜீர்ண நீரோடு கலந்து, காபின் Coffeien என்ற மருந்தாக மாறுகிறது.

இந்த மருந்து மாரடைப்பை தடுக்கிறது.

நம் உடம்பில் உற்பத்தியாகும் PAI ( Plasminogen Activator Inhibitor ) என்கிற ‘பால்ஸிமினோஜன் ஆக்டிவேட்டர் இன்கிபிட்டர்’ எனப்படும் இரசாயன பொருள் அதிகமானால்தான் ரத்தக்குழாயில் ரத்தம் கட்டியாகி மாரடைப்பு ஏற்படும்.

காபியில் உள்ள காபின் Coffein பொருள் இந்த PAI என்ற இரசாயனப் பொருளைக் கரைத்து விடுவதால் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு மாரடைப்பு தடுக்கப்படுகிறது.

காபி ஒரு நாளைக்கு இரண்டு தடவை மட்டும் 100 மில்லி என்கிற அளவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம். அளவுக்கு மீறினால் மூளை அதிக அளவில் தூண்டப்பட்டு இன்ஸோமினியா Insomnia எனப்படும் தூக்கமின்மை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு தூக்கம் வேண்டுமா…….வேண்டாமா என்பதை முடிவு செய்துகொண்டு காப்பி கோப்பையை கையில் எடுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version