பல்சுவை

சுவையான தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

Published

on

தேங்காய் ஒரு கிருமிநாசினி உணவு, பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்பெறச் செய்ய உதவும். மேலும் தேங்காய் சருமம் நலம் மேம்பட, தலைமுடி உதிர்வைத் தடுக்க, தொந்தியைக் கரைக்க, காக்காய் வலிப்பு குணமாக, இளமை தோற்றம் ஏற்பட, சிறு நீரக தொற்று நோய்கள் குணமாக, நீர்ச்சத்தாக, நார்ச்சத்தாக தேங்காய்யின் பயன்களை சொல்லிக்கொண்டே செய்யலாம்.

எனவே இங்கு இவ்வளவு பயன்களை அளிக்கும் தேங்காயை வைத்து பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. துருவிய தேங்காய்
2. ஒரு கப், சர்க்கரை
3. ஒரு கப், ஏலக்காய்
4. சிறிதளவு நெய்
5. சிறிதளவு முந்திரி

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயையும், சர்க்கரையையும் போட்டு சிறு துயில் கிளறி வேக விடவும்.

இது கொஞ்சம் நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான பதத்திற்கு மாறும். இன்னும் சில நிமிடங்களில் இந்தக் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.

இந்நிலையில், ஏலக்காய் சேர்க்கவும், விரும்பினால் முந்திரியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இறுதியாக, நெய்யை ஒரு தட்டில் தடவி தேங்காய் கலவையைக் கொட்டி ஆறவிடவும்.

லேசான சூடு இருக்கும்போது கத்தியால் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அவ்வளவு தாங்க சுவையான ஈசியான தேங்காய் பர்ஃபி தயர்.

Trending

Exit mobile version