சினிமா செய்திகள்

‘கோப்ரா’ ஓடிடி-யில் நேரடி ரிலீஸா?

Published

on

‘சியான்’ விக்ரம் நடிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’.

‘டிமான்டி காலனி’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான், முதல் முறையாக ‘கோப்ரா’ மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

இந்தப் படம் மே மாத வாக்கில் திரைக்கு வரலாம் என்று முதலில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் வரை ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் கோப்ரா, நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உலவி வருகிறது. இது குறித்து கோப்ரா படத்தைத் தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம், ‘ஓடிடி தளத்தில் கோப்ரா படத்தை வெளியிடும் முடிவில் நாங்கள் இல்லை. அப்படி வரும் தகவல்கள் போலியானவை’ என்று விளக்கம் கொடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version