இந்தியா

தமிழகம் உள்பட பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்!

Published

on

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில நாட்களில் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நிலக்கரி விலை விண்ணை முட்டி உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுவதால் பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி வழங்கக்கோரி மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் நிலைமை சீராகும் என்றும் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் கடும் மின்சார விநியோக பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய மின்சாரத் துறை செயலாளர் அலோக்குமார் என்பவர் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி மாற்றாக தேவையான அளவு கேஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒரு சில நாட்களில் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் மின்உற்பத்தி முடங்கும் நிலையில் சில நாட்களில் நிலைமை சீரடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வட சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் மின்வெட்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version