தமிழ்நாடு

கடன் தள்ளுபடியான கூட்டுறவு வங்கி நகைகள் எப்போது கிடைக்கும்: அமைச்சர் சக்கரபாணி

Published

on

கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். நாளையுடன் பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து இறுதிக் கட்ட பிரச்சாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஏராளமானோர் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் நகைகள் மீண்டும் எப்போது பயனாளர்கள் கைக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வெளிவரவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடியான நகைகள் வரும் 25ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்த தெரிவித்தார். இதனை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version