இந்தியா

வேலை நீக்கம் செய்திகளை முதலில் வெளியிடும் CNN நிறுவனத்திலேயே வேலைநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி

Published

on

இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்கம் குறித்த செய்திகளை முதலில் வெளியிடும் CNN என்ற ஊடகம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களி வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், கரன்ஸியின் மதிப்பு வீழ்ச்சி உள்பட ஒருசில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட், டுவிட்டர், கூகுள், ஆப்பிள் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகில் எந்த மூலையில் உள்ள நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தால் அது குறித்த செய்தியை முதலில் வெளியிடும் ஊடகங்களில் ஒன்றான CNN நிறுவனம் தங்கள் ஊழியர்களின் சிலரை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் CNN ஊடகத் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து CNN நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பர சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதால் ஆள் குறைப்பு உள்ளிட்ட ஒருசில செலவு குறைப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது என்றும் ஆனால் அதே நேரத்தில் குறைவான ஊழியர்கள் மட்டுமே வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் 11 சதவீதம் வரை வேலை நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அதன் மூலம் 150 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version