தமிழ்நாடு

சற்று நேரத்தில் முதல்வர் பதவி: குடும்பத்தினர்களுடன் வருகிறார் முக ஸ்டாலின்

Published

on

தமிழக முதல்வராக இன்னும் சற்று நேரத்தில் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்க உள்ளதை அடுத்து பதவி ஏற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதனை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் முக ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்படுகிறார் என்றும் அவரது குடும்பத்தினரும் அவருடன் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களின் வருகையால் விழா அரங்கமே நிரம்பி உள்ளது என்றும் மு க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

கூட்டணி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சரத்குமார், வேல்முருகன், திருமாவளவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக இன்று முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்றும், முதல்வர் முக ஸ்டாலின் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டாலின் வீட்டில் காவல் துறையினர் குவிந்து உள்ளனர் என்பதும், சித்தரஞ்சன் சாலை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முக ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவுக்கு தன்னை அழைத்ததற்கு நன்றி என்றும் தங்களது பணி தமிழ்நாட்டு மக்களை பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துக்கள் என்றும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version