தமிழ்நாடு

கேரளாவுக்கும் லீவு விடுங்க: பினரயி விஜயனுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

Published

on

கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது என்பதும் நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் சென்று செல்ல தொடங்கி உள்ளனர் என்பதும் இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் தமிழக எல்லையில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே அந்த 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் போது தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அதே போன்று கேரளாவிலும் பொங்கல் தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வரின் இந்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கேரள மாநில வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version