தமிழ்நாடு

நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கையால் மத்திய அரசு அதிர்ச்சி!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உள்பட ஒரு சில கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பு நீட் தேர்வை தமிழகம் தவிர கிட்டத்தட்ட வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை என்பதால் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். அவர் முதல்வரானதும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருப்பதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதால் தற்போது தமிழக முதல்வர் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுக்க உள்ளார். அதன்படி நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்த ஒரு சில மாநில முதல்வர்கள் ஆதரவு அளித்தால் கண்டிப்பாக நீட் தேர்வை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நீக்க பெரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை வரவேற்று உள்ளன என்பதால் இந்த முயற்சிக்கு எந்த அளவு பலன் கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version