இந்தியா

டெல்லியில் தமிழக முதல்வர்: மோடி, அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

Published

on

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார் என்றும் நீட்தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் மனு அளிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் நீட்தேர்வு மசோதா, பேரிடர் நிவாரண தொகை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

 

seithichurul

Trending

Exit mobile version