தமிழ்நாடு

முன்கள பணியாளராக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டேன்: டுவிட்டரில் முதல்வர் தகவல்!

Published

on

ஒரு முன்கள பணியாளராக நான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கூடுதல் பாதுகாப்பாக பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தில் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னுதாரணமாக இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

 

seithichurul

Trending

Exit mobile version