தமிழ்நாடு

முதல்வர் பதவியேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

Published

on

தமிழக முதல்வராக சற்றுமுன் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பதவி ஏற்பு பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதனை அடுத்து தற்போது அமைச்சர் பெருமக்கள் பதவி ஏற்றுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக முதல் முறையாக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த விழாவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். குறிப்பாக முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டதும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் கண் கலங்கியது பெரும் நெகழ்ச்சியாக இருந்தது, இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டு கனவு இன்று நிறைவேறியதை அடுத்து முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் மேல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் அந்த எதிர்பார்ப்பை அவர் சரியாக பூர்த்தி செய்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் முதல்வராக நீடிப்பாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version